பெண் சாமியார் ராதே மா பக்தர்களுடன் ஆபாச நடனமாடினார்

பெண் சாமியார் ராதே மா பக்தர்களுடன் ஆபாச நடனமாடினார்


 சர்ச்சைக்கு பெயர் போன பெண் சாமியார் ராதே மா  ஆபாச நடனமாடி  மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  இவர் தனது ஆதரவாளர் ஒருவருடன் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. குறித்த விடியோவில் நவ நாகரீக உடை அணிந்து இருக்கும் ராதே மா மெதுவாக நடன அசைவுகளை வெளிப்படுத்துகிறார்.

அப்போது அவரது அருகில் இருக்கும் ஆதரவாளர் ஒருவர் ராதே மாவுடன் நடனம் ஆட விரும்ப, அவருடன் சேர்ந்து ஆடுகிறார்.  அதன் பின் அவர் ராதே மாவை தூக்கி வைத்துக் கொண்டு நடனமாடியது தான் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை சம்பாதித்துள்ளது.சமீபத்தில் டெல்லி காவல் நிலையம் ஒன்றில் காவல் அதிகாரியின் இருக்கையில் இவர் அமர்ந்திருக்க, அதிகாரி கைகட்டி நின்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.