காங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

காங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

புதுடெல்லி:ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிபா கடத்தப்பட்டு, மயக்கமருந்து கொடுத்து, சிறை வைக்கப்பட்டு கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், உத்தர பிரதேச மாநிலம் உன்னோவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரும் அவரது சகோதரர் அதுல் சிங்கும் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று உன்னாவ் நகரைச் சேர்ந்த பப்பு சிங்கின் மகள் (18) சமீபத்தில் குற்றம் சாட்டினார். செங்கர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கடந்த 3-ம் தேதி பப்பு சிங்கை சரமாரியாக தாக்கினார். ஆனால், பப்பு மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கடந்த 5-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 நாட்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உள்ளது. மேற்கூறிய இரு பாலியல் பலாத்கார சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி மேற்கொள்ள உள்ளார்.