ரயில் விபத்துகளை தவிர்க்க ரயில்பாதைகளை சோதிக்கும் டிராலிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும்

ரயில் விபத்துகளை தவிர்க்க ரயில்பாதைகளை சோதிக்கும் டிராலிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும்

புதுடெல்லி: ரயில்பாதைகளை சோதிக்கும் கைகளால் இயக்கப்படும் டிராலிகளில் இனி ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என ரயில்வே அமைச்சகம்.ரயில்வே போர்ட் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் ஜிபிஎஸ்சைப் பொருத்தும் பணி முடிவடைய வேண்டும் என்று கூறியுள்ளது. ” இந்த டிராலிகள் எண்கள் இடப்பட்டு, ஜிபிஎஸ்சை டிராக்கர்ஸ் நன்கு பயன்படுத்தப்பட்டு டிராக்குகளை சோதிக்க வேண்டும்” என்று கடிதம் கூறுகிறது.இந்த முடிவு சமீபத்தில் நடந்த ரயில் விபத்துகளில் பாதைகளில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்று கண்டறியப்பட்டதை அடுத்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மாற்றப்பட்டு புதிய அமைச்சராக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஜனவரியில் அல்ட்ராசோனிக் அடிப்படையில் இயங்கும் ஆறு இயந்திரங்கள் மூலம் பாதைகளில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை கண்டறியும் வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது