உ.பி.யில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி விவசாயிகளுடன் கலந்துரையாடல்

உ.பி.யில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி விவசாயிகளுடன் கலந்துரையாடல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் நலத்திட்டங்களை பார்வையிடவும், மக்களின் குறைகளை கேட்டறியவும் அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், நேற்று காலை உத்தரப்பிரதேசம் சென்ற ராகுல் காந்தி அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மேலும், கோட்வா கிராமத்தில் உள்ள தவுரி கிராமத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பார்வையிட்டார். வேலைகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.மேலும், அமேதி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.