வெற்றிகரமாக 100-வது செயற்கைகோள் விண்ணில் ஏவபட்டது: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வெற்றிகரமாக 100-வது செயற்கைகோள் விண்ணில் ஏவபட்டது: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ செயற்கைகோள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சொந்தமான 30 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதில் 710 கிலோ எடைகொண்ட கார்ட்டோ சாட் -2 செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. 

இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து  காலை 9.28 மணிக்கு  பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தியது. 100-வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி சாதனை  புரிந்த இந்திய விண்வெளி ஆய்வுக்கழக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளி தொழில்நுட்பம் விவசாயிகள், மீனவர்களுக்கு பலன் தரும் என மோடி கூறியுள்ளார்.