சபரிமலை விவகாரத்தில் வன்முறை - கேரள கவர்னரை சந்தித்து பினராயி அறிக்கையளித்தார்

சபரிமலை விவகாரத்தில் வன்முறை - கேரள கவர்னரை சந்தித்து பினராயி அறிக்கையளித்தார்

திருவனந்தபுரம்:  கேரளாவில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பற்றி மத்திய உள்துறை, கேரள கவர்னர் சதாசிவத்திடம் அறிக்கை கேட்டது. இதை தொடர்ந்து கவர்னரும் அறிக்கையை அனுப்பினார்.

இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்றிரவு திடீரென்று கவர்னர் சதாசிவத்தை சந்தித்து பேசினார். அப்போது கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தின்போது நடந்த வன்முறை சம்பவங்கள் அது தொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளித்தார். மேலும் தனது விளக்கத்தை கவர்னரிடம் அறிக்கையாக தாக்கல் செய்தார்.