கடும் நிபந்தனைகளுடன் 5 நாள் பரோலில் வரும் சசிகலா

 கடும் நிபந்தனைகளுடன் 5  நாள் பரோலில் வரும் சசிகலா

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பிப்ரவரியில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கேட்டு சசிகலா சார்பில் சிறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. பரோல் தொடர்பான வழக்கமான விசாரணை, நடைமுறைகள் முடிந்ததும் 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு உள்ளது.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை நிபந்தனை என தகவல் 

ஊடகங்களை சந்திக்கக்கூடாது 

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, என  நிபந்தனைகள் விதிக்கபட்டு உள்ளன.