5 மாதத்திற்கு பின் பெற்றோரிடம் சென்ற குழந்தைகள்..சிம்லாவில் நடந்த அதிசயம்

5 மாதத்திற்கு பின் பெற்றோரிடம் சென்ற குழந்தைகள்..சிம்லாவில் நடந்த அதிசயம்

சிம்லா :சிம்லா மருத்துவமனையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்  பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் மாற்றி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பாக, ஷீத்தல், அனில் தாக்கூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கில் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் குழந்தை மாற்றப்பட்டது உண்மை தான் என கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அஞ்சனா, தாக்கூர் தம்பதியினரிடம் கடந்த 5 மாதங்களாக வளர்ந்த ஆண் குழந்தை ஷீத்தல் தம்பதியினருடையது என விசாரணையில் தெரிய வந்ததால் குழந்தைகள் மீண்டும் மாற்றிக்கொள்ளப்பட்டன.

மருத்துவமனையில் ஷீத்தலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால் அரை மணிநேரம் கழித்து பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டத்தாக புகார் எழுப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இந்த குழப்பம் முடிவடைந்துள்ளது.

சொந்த குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் தம்பதிகள் இருப்பினும் 5 மாதங்களாக வளர்த்த குழந்தைகளை மாற்றிக் கொள்வது நெகிழ்ச்சியாக இருப்பதாக தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.


Loading...