சமூக வலைதளம்  பயங்கரவாதத்திற்கு  வழி வகுக்கிறது :ராணுவ தளபதி

சமூக வலைதளம்  பயங்கரவாதத்திற்கு  வழி வகுக்கிறது :ராணுவ தளபதி


புதுடில்லி: பிரிவினைவாதத்தை பரப்ப முக்கிய தளமாக பயன்படுவதால், சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசுகையில், பிரிவினைவாதத்தை பரப்புவதற்கு முக்கிய தளமாக பயன்படுவதால், சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

தவறான தகவல், இல்லாத ஒன்றை திரித்து கூறுதல், மதம் குறித்து தவறான செய்திகளை பரப்புவதால், இந்தியாவிலும், காஷ்மீரிலும் பல வகையான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், தான், படித்த இளைஞர்கள் அதிகம் பேர் பயங்கரவாத அமைப்பில் இணைகின்றனர்.