‘பத்மாவதிக்கு’ எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

‘பத்மாவதிக்கு’ எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்றுக் குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' படத்தைத் வெளியிட தடை கோரி, தாக்கலான மனுவை உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், 'பத்மாவதி' திரைப்படத்திற்கு மறு தணிக்கை செய்யவும், சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

''படத்தில் உள்ள காட்சிகள் என்னவென்று தெரியாமலேயே, சிலவற்றை நீக்க வேண்டும் என படம் வெளியாகும் முன்பே மனுதாரர் கோருவது ஏற்புடையதல்ல. இதை ஏற்று எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' எனக் கூறினர்.