தமிழிசை கேட்டதாலேயே உறுப்பினராக சேர்த்தோம்: மக்கள் நீதி மய்யம்

தமிழிசை கேட்டதாலேயே உறுப்பினராக சேர்த்தோம்: மக்கள் நீதி மய்யம்

சென்னை: தமிழிசை இணையதளத்தில் இருந்து தொடர்பு கொண்டதாலேயே அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டார் என மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

கிடைக்கும் மின்னஞ்சல் முகவரிகளை கொண்டு உறுப்பினராக்கி கொள்வதா என்றும் சாடினார் தமிழிசை. இதற்கான ஆதாரத்தையும் அவர் காண்பித்தார்.தமிழிசை கேட்டதாலேயே உறுப்பினராக சேர்த்தோம்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த மக்கள் நீதி மய்யம்