ஆதாரை இணைக்க காலகெடு இல்லை என சுப்ரீம்கோர்ட்

ஆதாரை இணைக்க காலகெடு இல்லை என சுப்ரீம்கோர்ட்

டெல்லி : ஆதார் எண்ணை செல்போன், வங்கிக்கணக்குடன் இணைக்க எந்த கால அவகாசமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு மற்றும் செல்போன் எண்ணுடன் இணைக்க மார்ச் 31ம் தேதி கடைசி தேதி என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது. ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.