முத்தலாக் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த உத்தரபிரதேசம்

முத்தலாக் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த உத்தரபிரதேசம்

முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டவரைவு தயார் செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. வாய்மொழியாக, எழுத்துப்பூர்வமாக, இ-மெயில் உள்பட தகவல்தொடர்பு உபகரணங்கள் மூலம் உடனடியாக முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் ஆண்டுகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்காக நீதிமன்றத்தை நாடவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த வரைவு மசோதா குறித்து வருகிற 10–ந் தேதிக்குள் தங்கள் கருத்தை தெரிவிப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து வருகிற 15–ந் தேதி தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் ஒப்புதல் அளித்து உள்ளது. மாநில மந்திரிசபை கூட்டத்தில் இதற்கு ஆதரவு அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.