கேரளா அரசியலில் சலசலப்பை ஏற்பெடுத்திய யோகி ஆதித்யாநாத்தின் கண்ணூர் பாத யாத்திரை

கேரளா அரசியலில் சலசலப்பை ஏற்பெடுத்திய யோகி ஆதித்யாநாத்தின் கண்ணூர் பாத யாத்திரை

கண்ணூர்: கேரள மாநிலம், கண்ணுாரில், இடதுசாரி கட்சியினரின் வன்முறைகளை கண்டித்து, பா.ஜ., சார்பில் தேசிய தலைவர், அமித் ஷா ஜன ரக்சா என்ற பெயரில் 15 நாள் பாதயாத்திரையை பையனூரில் துவக்கி வைத்தார். யாத்திரையின் இரண்டாவது நாளான இன்று கண்னூர் மாவட்ட பாத யாத்திரையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் கலந்து கொண்டார்.

பினராயி விஜயன் சொந்த மாவட்டமான கண்ணூரில் துவங்கிய பாத.யாத்திரையில் பங்கேற்று 3000 பா.ஜ.தொடண்டர்களுடன் சில கிலோ மீட்டர்கள் நடந்து சென்றார். அவருடன் பா.ஜ.மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன், மத்திய இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா, மற்றம் எம்.பி.க்கள் சென்றனர்.பாத யாத்திரையின் போது யோகி ஆதி்யநாத் கூறியது, கேரளாவில் அரசியல் வன்முறைகள், அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இந்து தலைவர்களை குறித்து கொலை செய்கின்றனர். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை.

இம்மாநிலத்தில் கடந்த ஓராண்டில் டெங்குவிற்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் லவ் ஜிஹாத்தை தடுப்பது தொடர்பாக கேரள அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. இவ்விவகாரம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது என குறிப்பிட்டார். இங்கு நடப்பது பொறுப்பற்ற ஆட்சி என்பது தெரிகிறது.