உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் பலி

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் பலி

டேராடூன்: உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. நேற்று நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
 
இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.