எங்களுக்காகப் போராடவில்லை, மக்களுக்காகப் போராடுகிறோம் - அரவிந்த் கெஜ்ரிவால்

எங்களுக்காகப் போராடவில்லை, மக்களுக்காகப் போராடுகிறோம் - அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரியும், வீட்டுக்கே சென்று ரே‌ஷன் பொருட்களை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டும் துணை முதல்–மந்திரி மணிஷ் சிசோடியா, மந்திரிகள் கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோருடன் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11–ந் தேதி மாலையில் துணைநிலை கவர்னரை சந்திக்க சென்றார்.
துணை நிலை ஆளுநர் அலுவலகத்திலிருந்து வீடியோ மூலம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எங்களுக்காக நாங்கள் போராடவில்லை, மக்களுக்காகவே போராடுகிறோம். பள்ளிகளுக்காக, தண்ணீருக்காக, கிளினிக்குகளுக்காக, நாங்கள் போராடுகிறோம். வாக்களித்த டெல்லி மக்களுக்கு இந்த வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போராடுகிறோம் என கூறியுள்ளார்.