பத்மாவதி’யை திரையிட அனுமதிக்க மாட்டோம் - உ.பி. துணை முதல்வர்

பத்மாவதி’யை திரையிட அனுமதிக்க மாட்டோம் - உ.பி. துணை முதல்வர்

லக்னோ: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பத்மாவதி படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அப்படத்தை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டுள்ளன.

தொடர் எதிர்ப்புகளை தொடர்ந்து பத்மாவதி படத்தின் ரிலீஸைத் தாங்களாக முன்வந்து தள்ளிவைப்பதாக தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 அறிவித்துள்ளது. 
இந்நிலையில், பத்மாவதி படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்காவிட்டால் படத்தை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திரையிட விடமாட்டோம் என அம்மாநில துணைமுதல்வரும், கேளிக்கை வரி மந்திரியுமான கேஷவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.