பெங்களூரு : கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவை இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில தொழிற்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்தியாவைப் போன்று மிக வேகமாக முன்னேறி வரும் நாடு ஒரு இடத்தை மட்டும் தலைநகராக கொண்டு இயங்குவது, வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்தும் .
அதனால் பெங்களூருவை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனை வலியுறுத்தி அம்மாநில சிறு மற்றும் பெரு தொழிற்சாலைகள் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், இந்தியாவுக்கு உடனடியாக இரண்டாவது தலைநகர் தேவை, அதற்கு பெங்களூரு சரியான இடமாக இருக்கும்.