சபரிமலை வனப்பகுதியில்  360 கிலோ வெடிமருந்து பறிமுதல்!

சபரிமலை வனப்பகுதியில்  360 கிலோ வெடிமருந்து பறிமுதல்!

பம்பை: சபரிமலை அய்யப்பன் கோவில் வனப்பகுதியில் 12 பீப்பாய்களில் இருந்த 360 கிலோ வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.சுமார் 12 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதனிடையே சபரி பீடம் வனப்பகுதியில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று 12 பீப்பாய்களில் இருந்த 360 கிலோ வெடிமருந்தை கைப்பற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். சபரிமலை வெடிவழிபாட்டுக்காக வாங்கி வைக்கப்பட்ட வெடிமருந்தா? அல்லது சபரிமலையில் நாசவேலைக்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.