சென்னையில் பயங்கரம்.. 65 வயது மூதாட்டி படுகொலை...சொத்துக்காக நடந்ததா?

 சென்னையில் பயங்கரம்.. 65 வயது மூதாட்டி படுகொலை...சொத்துக்காக நடந்ததா?

சென்னை:சென்னை தி.நகரில் 65 வயதான சாந்தி என்ற மூதாட்டி கொடூரமாகக் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தியாகராய நகர் ஹபிபுல்லா சாலைப் பகுதியில் வசித்து வந்தவர் சாந்தி. 60 வயதான அவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் சாந்தி தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். தலையில் பலத்த காயத்துடன், கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர் இறந்து கிடந்திருக்கிறார்.

இதையடுத்து, சாந்தியின் உடலை, பிரேதச பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். சாந்தியின் வீட்டில் நகை, பணம் கொள்யைடிக்கப்பட்டதா, திருமணம் ஆகாத சாந்தியின் வீட்டை அபகரிப்பதற்காக உறவினர்களே கொலை செய்தனரா என்ற கோணங்களிலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.