நடுரோட்டில்  கேட்பாரற்று கிடந்த ரூ.12 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள்...

நடுரோட்டில்  கேட்பாரற்று கிடந்த ரூ.12 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள்...

புதுடெல்லி: டெல்லியின் ஷாதாரா பகுதியில் ஒரு கைப்பையில் கேட்பாரற்று கிடந்த 12 லட்சம் ரூபாயை அவ்வழியாக ரோந்துச் சென்ற போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

டெல்லியின் ஷாதாரா பகுதியில் புஷ்ட்டா சாலை வழியாக நேற்று ரோந்துச் சென்ற போலீசார், சாலையோரத்தில் ஒரு சிகப்பு நிற கைப்பை அனாதையாக கிடப்பதை கண்டனர்.

கேட்பாரற்று கிடந்த அந்தப் பையை எடுத்து, திறந்துப் பார்த்தபோது உள்ளே 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் 12 லட்சம் ரூபாய் இருந்தது. உடனடியாக, அந்தப் பையை தாங்கள் பணியாற்றும் காந்தி நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற தலைமை கான்ஸ்டபிள் மன்மோகன், சஞ்சீவ் ஆகியோர் பணத்தை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கைப்பை கிடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா ஏதும் இல்லாததால் மேற்படி பணத்துக்கு உரிமைகோரும் நபரை எதிர்பார்த்து டெல்லி போலீசார் காத்திருக்கின்றனர்.