ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை

ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை

துபாயில் பணியாற்றிவந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உள்ள ஜுமெய்ரா நகரில் இருக்கும் பிரபல கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஷிபின் தாமஸ்(32). கேரள மாநிலத்தை சேர்ந்த இவரது மனைவியும் ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியரின் இரு குழந்தைகள் கேரளாவில் உள்ள தாத்தா, பாட்டியிடம் வளர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஷிபின் தாமஸ் கடந்த திங்கட்கிழமை (4-ம்தேதி) காலை அவர் பணியாற்றும் கல்லூரி வளாகத்தில் உள்ள எழுதுபொருள் சேமிப்பு அறைக்குள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.இதைகண்ட சகப்பணியாளர் அளித்த புகாரின்பேரில் விரைந்துவந்த துபாய் போலீசார், ஷிபின் தாமஸ் பிரேதத்தை கைப்பற்றி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் இருக்கும் பதிவுகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.