அமெரிக்காவில் மாயமான இந்திய வம்சாவளி மாணவரின் பிணம் மீட்பு..!!

அமெரிக்காவில் மாயமான இந்திய வம்சாவளி மாணவரின் பிணம் மீட்பு..!!

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை மாயமான இந்திய வம்சாவளி மாணவரின் பிணம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள கார்னெல் பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு பயின்றுவந்த ஆலாப் நரசிப்புரா(20) என்ற இந்திய வம்சாவளி மாணவர் கடந்த புதன்கிழமையன்று திடீரென்று காணாமல் போனார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கடந்த 17-ம் தேதி மாலை அவர் கல்லூரி வளாகத்தில் இருந்து காணாமல் போனதை கண்டறிந்தனர். ஆலாப் நரசிப்புராவின் புகைப்படம் மற்றும் அங்க அடையாளங்களுடன் அறிவிப்பும் வெளியானது.

கல்லூரி அமைந்துள்ள இடத்தின் அருகாமையின் உள்ள வனப்பகுதிகள் மற்றும் அருவிகள் உள்ள இடங்களில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், இத்தாக்கா நீர்வீழ்ச்சி அருகாமையில் உள்ள சிற்றோடையில் ஆலாப் நரசிப்புரா பிணமாக கிடப்பதை கண்டறிந்துள்ளனர்.

புகைப்படங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவரது மரணத்துக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக நியூயார்க் மாவட்டத்துக்குட்பட்ட கார்னெல் பல்கலைக்கழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.