சர்வதேச அறிவியல் போட்டியில் உயரிய விருது பெற்ற இந்திய மாணவர்

சர்வதேச அறிவியல் போட்டியில் உயரிய விருது பெற்ற இந்திய மாணவர்

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் போட்டியில் இந்திய மாணவர் வெற்றி பெற்றுள்ளார். விவசாயத்தை மேம்படுத்துவது சார்ந்த கண்டுபிடிப்பிற்கு ஜாம்ஷெட்பூரை சேர்ந்த பிரஷாந்த் ரங்கநாதனுக்கு விருது வழங்கப்பட்டது.   
 
இவருடன் இந்தியா முழுவதிலும் இருந்து 20 பள்ளி மாணவர்களும் போட்டியில் கலந்து கொண்டனர். பிரஷாந்த் ரங்கநாதனின் திட்டம் நாட்டின் விவசாயத்தை அழித்து வரும் பூச்சிக்கொல்லிகளை சிதைவுறச் செய்யும். இந்த போட்டியில் நான்கு இந்திய அமெரிக்கர்கள் வெவ்வேறு பிரிவுகளில் விருது பெற்றுள்ளனர். 

உலகம் முழுக்க சுமார் 1700 மாணவர்கள் கலந்து கொண்ட சர்வதேச போட்டி நேற்று நிறைவுற்றது. போட்டியின் உயரிய விருது ஜெர்மனியை சேர்ந்த இவோ செல் என்ற மாணவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு 75,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.