சிங்கப்பூர்:  148 ஆண்டுகள் பழைமையான கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது

சிங்கப்பூர்:  148 ஆண்டுகள் பழைமையான கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது

சிங்கப்பூர் நாட்டின் பரபரப்பான வாட்டர்லூ தெருவில் (பழைய பெயர் சர்ச் தெரு) இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களால் 1870-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. காலப்போக்கில் பொலிவிழந்து காணப்பட்ட இந்த கோவிலை புதுப்பித்து புணமரைக்க கடந்த 2014-ம் ஆண்டு பராமரிப்பு குழு அமைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, சுமார் 40 லட்சம் சிங்கப்பூர் டாலர் செலவில் கோவிலின் மேல்பிரகாரம் மற்றும் கோபுரங்கள் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிர தகடுகளால் புதுப்பிக்கப்பட்டன. சுவரோவியம் மற்றும் கல்தூண்களை பொலிவுப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன.இதையடுத்து, நேற்று காலை 9.15 மணியளவில் நடைபெற்ற கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழாவை சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் தகவல்தொடர்புத்துறை மந்திரி எஸ்.ஈஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

148 ஆண்டுகள் பழைமையான கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக பூஜைகளில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து வந்துள்ள வேத விற்பன்னர்கள் 48 நாட்கள் நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளனர்.