அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன்கார்டு எண்ணிக்கை 45 சதவீதம் உயர்வு

அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன்கார்டு எண்ணிக்கை 45 சதவீதம் உயர்வு

அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன்கார்டு எண்ணிக்கையை 45 சதவீதமாக உயர்த்த நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் உயர்ந்த பதவிகளில் வேலை செய்ய செல்லும் வெளிநாட்டினருக்கு எச் 1 பி விசா வழங்கப்படுகிறது. அங்கு நிரந்தரமாக குடியேறி, பணிபுரிய விரும்புபவர்களுக்கு அமெரிக்க அரசால் கிரீன்கார்டு வழங்கப்படுகிறது. இது, அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கான அனுமதியாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் எதிர்காலத்தை பாதுகாக்கும் புதிய சட்டப்படி கிரீன்கார்டுகள் விநியோகம் செய்யும் எண்ணிக்கையை உயர்த்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது ஆண்டுக்கு 1.20 லட்சம் கிரீன்கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இனிமேல் 45 சதவீதம் கூடுதலாக 1.75 லட்சம் வழங்க முடிவு செய்யபப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்து போட்டால், அது இந்தியர்களுக்கு சாதகமாக அமையும்.
கிரீன்கார்டு கேட்டு 5 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்த மசோதா சாதகமாக அமையும்.  வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,’ அமெரிக்க நலனில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு அதிபர் மிகவும் முக்கியத்துவம் அளித்துள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.