அமெரிக்காவில் இந்திய வாலிபர் போலீசாரால்  சுட்டுக் கொலை...

அமெரிக்காவில் இந்திய வாலிபர் போலீசாரால்  சுட்டுக் கொலை...

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் நதானியல் பிரசாத் (18). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரை ஒரு குற்ற வழக்கிற்காக போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் பிரீமாண்ட் பகுதியில் இவர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். காரை ஒரு பெண் ஓட்டி சென்றார். தெருவில் சென்ற அவரை பார்த்த போலீசார் அது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதை தொடர்ந்து ரோந்து சுற்றி வந்த போலீஸ் அதிகாரிகள் அவரை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். அவர்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி பிரசாத் தப்பி ஓடினார்.அவரை துரத்தி சென்ற போலீஸ் அதிகாரிகள் அங்குள்ள பெட்ரோல் நிலையம் அருகே அவரை மடக்கி பிடிக்க சென்ற போது அவர்களை நோக்கி பிரசாத் துப்பாக்கியால் 3 தடவை சுட்டான்.

உடனே போலீசார் அவரை நோக்கி திருப்பி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் குண்டு பாய்ந்து பிரசாத் பரிதாபமாக இறந்தார்.இதற்கிடையே காரை ஓட்டி வந்த பெண் பிரீமான்ட் போலீசில் சரண் அடைந்தார். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட பிரசாத்தின் தாயார் ஆவார்.