அறியாமையை அழிப்பவர் குரு

அறியாமையை அழிப்பவர் குரு

பணம், பொருள் போன்ற சிற்றின்பத்தின் மீது ஆசை கொள்ளாதவர்களே இந்த உலகில் இல்லை. ஆழ்ந்த பக்தி, மன உறுதி என்பது எல்லாருக்கும் இருப்பதில்லை. மனதிற்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்து, மனிதனை கட்டுப்படுத்த நல்ல ஆசிரியர் தேவைப்படுவது போல, சபரிமலை சென்று மெய்யாக அமர்ந்திருக்கும் ஐயப்பனை தரிசனம் செய்து வருவதற்கும் அனுபவமுள்ள குரு சுவாமியின் உதவியானது கட்டாயம் தேவை.

‘கு’ என்பதற்கு அஞ்ஞானம் என்றும், ‘ரு’ என்பதற்கு ஒழிப்பது என்றும் பொருள். குரு என்றால் அஞ்ஞானத்தை ஒழிப்பவர் என்று அர்த்தம். ஞானம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கிடக்கிறது. அதனை வெளிக்கொண்டு வருபவர்தான் குரு. அனைவரிடமும் தெய்வ சிந்தனை இருக்கிறது. ஆனால் அதனை பயன்படுத்தி தெய்வத்தை வழிபடும் வகை தெரியாமல் இருள் என்னும் அஞ்ஞானத்தில் பலர் உள்ளனர்.