கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.இந்த ஆண்டுக்கான விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நெடுந்தீவு பங்குத்தந்தை தேவாலயம் முன்புள்ள கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை இருநாட்டு மக்கள் முன்னிலையில் ஏற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து மரத்தாலான பெரிய சிலுவையை இருநாட்டு மக்களும் சுமந்து வர ஆலயத்தை சுற்றி 11 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெறுகிறது.விழாவில் பங்கேற்பதற்காக 65 விசைப்படகுகள் மற்றும் 15 நாட்டுப் படகுகளில் மீனவர்கள் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.மொத்தம் 2 ஆயிரத்து 250 பேர் பங்கேற்கிறார்கள். விழா நாளையும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது.கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.