திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 19 போலி இணைய தளம் கண்டுபிடிப்பு

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 19 போலி இணைய தளம் கண்டுபிடிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளம் வாயிலாக தற்போது தரிசன டிக்கெட் முன்பதிவுகள், வாடகை அறை பெறுதல், நன்கொடை, உண்டியல் காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளை அளித்து வருகிறது. இதனால் பக்தர்கள் தேவையான தேதிகளில் தரிசன டிக்கெட்டை தங்கள் விருப்பம் போல் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக பல போலி இணையதளங்கள் விளம்பரப்படுத்தி வருகின்றன. பக்தர்கள் அந்த இணையதளங்கள் மூலம் தங்களின் பணத்தை இழந்து வருகின்றனர். இது குறித்து பல பக்தர்கள் தேவஸ்தானத்திடம் புகார் அளித்தனர். அதனால் தேவஸ்தான கண்காணிப்பு துறை போலியாக செயல்பட்டு வரும் 19 இணையதளங்களை அடையாளம் கண்டுள்ளது. அதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் இனி அந்த இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.tirupatibalaji.ap.gov.in
2.ttdsevaonline.com
3.www.tirumala.org

ஆகிய 3 இணைய தளங்களை மட்டும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.