திருநள்ளாறு கோவில் கும்பாபிஷேகம்

திருநள்ளாறு கோவில் கும்பாபிஷேகம்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 11-ந் தேதி காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த் ராஜா செய்து வருகிறார்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி பூஜையும், நேற்று தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா நேற்று கும்பாபிஷேகத்திற்கு செய்யப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார்.