தீபாவளிக்காக சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா.

தீபாவளிக்காக சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா.

தீபாவளி பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப் படும் என்று ஐ.நா. சபை அறிவித் துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அந்தப் பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. சபை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐ.நா.வின் தபால் தலை நிர்வாகப் பிரிவு, தீபாவளி பண் டிகைக்காக அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது. நியூயார்க்கில் (ஐ.நா. தலைமை அலுவலகம்) அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தீபாவளி சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்படும். ஒரு தாளில் 10 சிறப்பு தபால் தலைகள் இருக்கும். அதன் விலை 1.15 டாலர். அந்தச் சிறப்பு தபால் தலையில் அகல்விளக்கு ஒளிரும் படம் இடம்பெறும்.