ஜம்மு - காஷ்மீர்  அமர்நாத்  பனிலிங்கம்... 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஜம்மு - காஷ்மீர்  அமர்நாத்  பனிலிங்கம்... 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் தோன்றிய பனிலிங்கத்தை இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 46 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும், பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் அமர்நாத் ஆலயத்தை சென்றடைய வேண்டும்.

இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. தீவிரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. மிக அதிகளவில் ராணுவ வீரர்கள், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே, கடந்த 10ம் தேதி அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் பக்தர்கள் தொடர்ந்து யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், அமர்நாத் குகைக்கோயிலில் உருவான பனிலிங்கத்தை இதுவரை 2 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து கோயில் நிர்வாக செய்தி தொடர்பாளர் தொடர்ந்து 18-வது நாளான நேற்று 7,214 பேர் கொண்ட குழு பனி லிங்கத்தை தரிசனம் செய்ய புறப்பட்டது. யாத்திரை தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 2 லட்சத்து 2,705 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் தாக்குதலில் 8 பேர் பலி, பக்தர்கள் சென்ற பஸ் உருண்டு விழுந்து 16 பேர் பலி என சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும், பக்தர்கள் தொடர்ந்து பனிலிங்கத்தை தரிசனம் செய்து வருவது குற்ப்பிடத்தக்கது.