பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் தீவிர கண்காணிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் தீவிர கண்காணிப்பு

திருவனந்தபுரம்:சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது.

 அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே சபரிமலைக்கு தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மத்திய கமாண்டோ போலீசார் 100 சபரிமலையில் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுபோக மாநில போலீசாரும் வனத்துறையினரும் காட்டு பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

சபரிமலை 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் முதல் முறையாக இந்த ஆண்டு சபரிமலையில் ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது