இன்று பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டம்!

இன்று பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டம்!

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறதுசிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா 13 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் விநாயகருக்கும், தில்லைகாளி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவு வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி இரவு தெருவடைச்சான் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) தீர்த்தவாரியும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், 15-ந்தேதி தெப்ப உற்சவமும், 16-ந்தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் வைகாசி திருவிழா முடிவடைகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.