அனைவருக்கும் உதவ வேண்டும்

அனைவருக்கும் உதவ வேண்டும்

அநியாயக்காரனுக்கும் உதவி செய்’ என்று இஸ்லாம் கூறுகிறது. இது அவன் செய்யும் அநியாயத்திற்காக அல்ல. அநியாயத்தை அவன் விடுவதற்காக. அநியாயத்திலிருந்து அவன் விடுதலை பெற்று, நியாயவாதியாக மாறுவதற்காக.

‘ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவர் மற்றவருக்கு அநியாயம் செய்ய மாட்டார். அவர் மற்றவருக்கு உதவி செய்வதையும் கைவிடமாட்டார். யார் தமது சகோதரனின் தேவையை நிறைவேற்றுவாரோ, அவரின் தேவையை இறைவன் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமுடைய கஷ்டத்தை நீக்குவாரோ, அவரின் மறுமைநாளின் கஷ்டங்களை இறைவன் நீக்கிவிடுகின்றான். யார் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைக் கிறாரோ, அவரின் குறைகளை இறைவன் மறுமைநாளில் மறைத்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்)

‘ஒருவர் தமது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அவருக்கு இறைவனின் உதவி இருந்து கொண்டே இருக்கிறது’ என நபி (ஸல்) கூறினார்கள்