வைகாசி மாதத்தின் விசேஷ நாட்கள்...!

வைகாசி மாதத்தின் விசேஷ நாட்கள்...!

வைகாசி மாதத்தில் திருமணம் சீமந்தம், உபநயனம், காது குத்த, புது வண்டி வாங்க, தொழில் தொடங்க, கட்டிடம் கட்ட வாஸ்து செய்ய முக்கிய நாட்களைப் பார்க்கலாம். ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். 

எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சிகளை நல்ல நேரம், நாள் பார்த்து செய்வது வழக்கம். வைகாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்திற்கான நல்ல நாட்களை அறிந்து கொள்வோம்.

வைகாசி மாதம் 21ஆம் தேதி அதாவது ஜூன் 4 ஆம் தேதி திங்கட்கிழமை வாஸ்து நாளாகும். இந்த நாளில் காலை 10.02 மணிமுதல் 10.30 மணிவரை வாஸ்து பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.

கிரகப்பிரவேசம் செய்ய வைகாசி 20,21,27 ஆகிய நாட்கள் நல்ல நாட்கள் காது குத்த வைகாசி 6,11,13 ஆகிய தேதிகள் காலை 8 மணி முதல் 10 மணிவரை நல்ல நேரமாகும்.

தில ஹோமம் செய்ய வைகாசி 1, வைகாசி 22, 30 நல்ல நாட்கள் புது வண்டி, வாகனம் வாங்க வைகாசி 6, 11,21,27 நல்ல தினங்களாகும். இந்த தினங்களில் புது வண்டி வாங்கலாம். வைகாசி 5,9,15,19,22,24,29 ஆகிய நாட்களில் பகல் 12 முதல் 1 மணிக்குள் கடன்களை திருப்பி தரலாம். கடன் சுமை குறையும்.