மீனாட்சி கோயிலில் மொபைல் போனுக்கு தடை விதிக்க ஆலோசனை

மீனாட்சி கோயிலில் மொபைல் போனுக்கு தடை விதிக்க ஆலோசனை

மதுரை: மீனாட்சி கோயிலில் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு: மீனாட்சி கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தீவிபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டும் எனக்கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட், மீனாட்சி கோயிலுக்குள் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் தவிர பார்வையாளர்கள், பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்லக்கூடாது. கோயிலுக்கு மத்தியபடை பாதுகாப்பு அளிப்பது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.