பேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்

பேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்

கோவை : கோவை பேரூர் ஆதினம் பெரியப்பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார். இவருக்கு வயது 97. காட்டம்பட்டியில், சாந்தலிங்க அடிகளார் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜர் அடிக்கல் நாட்டினார்.
இங்கு படித்த மாணவர்களில் ஏராளமானோர், பெரிய வேலைகளில் இன்று உள்ளனர், அவர்கள் தொழிலதிபர்களாகவும், அரசு, தனியார் நிறுவன உயர் அதிகாரிகளாவும் பணியாற்றி வருகின்றனர். இதேபோல, பேரூரில் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் மருத்துவமனையும் இயங்கி வருகிறது. கடந்த சில காலங்களாகவே உடல்நலக்குறைவால் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மரணமடைந்தார்.