நாளை திருப்பதியில் பிரம்மோற்சவம் துவக்கம்

நாளை திருப்பதியில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை  நாளை துவங்கவுள்ள பிரம்மோற்சவத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  பங்கேற்று அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்க 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அனைத்து சேவைகள், முன்னுரிமை தரிசனங்கள், விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், சர்வ தரிசன டிக்கெட் பக்தர்கள் வருகைக்கேற்ப குறைந்த அளவில் வழங்கப்படும். திருமலைக்கு வருவதற்கான இரண்டு மலைப்பாதைகளும் 24 மணி நேரமும் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படும்.