சபரிமலை விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சபரிமலை விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் ஷைலஜா விஜயன் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உலகெங்கும் உள்ள பல லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து உள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தவர்கள் அய்யப்ப பக்தர்கள் அல்ல.எனவே, அந்த மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டு எந்த விசாரணையும் மேற்கொள்ள சட்டரீதியான முகாந்திரம் எதுவும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள மறுஆய்வு மனுதாரர்களின் சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாடு ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்து இருக்கிறது.

சபரிமலை கோவிலில் பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. மக்களின் மத உணர்வை கோர்ட்டு மதிக்க வேண்டும். மேலும் மத நம்பிக்கை விவகாரங்களில் அரசியல் சாசனத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. மத நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தில் கோர்ட்டு தலையிடக்கூடாது. சபரிமலை கோவில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணை பொதுநல வழக்கு என்ற நடைமுறைக்கு முற்றிலும் எதிராக அமைந்து உள்ளது.