சபரிமலையில் 144 தடை உத்தரவால் கூட்டம் குறைந்தது

சபரிமலையில் 144 தடை உத்தரவால் கூட்டம் குறைந்தது

சபரிமலையில்கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறந்ததில் இருந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற கெடுபிடி காரணமாக பக்தர்களின் வருகையும் குறைந்து உள்ளது. இந்தநிலையில், இன்று முதல் 8-ந்தேதி வரை இளவங்கல் முதல் சன்னிதானம் வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் நாமஜெபம் நடத்தவோ, சரணகோ‌ஷம் எழுப்பவோ தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சபரிமலையில் அய்யப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள், போலீஸ் கெடுபிடிகள் பற்றி ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஸ்ரீஜெகன்,ராமன், முன்னாள் டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவை கேரள உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்த குழு வருகிற 10-ம் தேதிக்குள் தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.