தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா

தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் உலக பாரம் பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் சித்திரைத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேர் சிதிலமடைந்ததை தொடர்ந்து 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

இதையடுத்து தஞ்சை பெரியகோவிலுக்கு புதிதாக தேர் செய்யப்பட்டதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7.30 மணி முதல் 8 மணிக்குள் கொடிமரத்திற்கு பலவேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி கொடிமரத்தை வந்தடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மாதவன், இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு உதவியாளர் சந்திரசேகரன், கோவில் சூப்பிரண்டு ரெங்கநாதன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்