பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) ர‌ஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியை விட வேகமாக செல்லும் இந்த ஏவுகணைகள் தரை, வான், கடல் என 3 விதமான பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய கடற்படையானது அரபி கடலில் வைத்து இலக்கை நோக்கி ஏவியது. இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.