இந்தியாவை கண்காணிக்கும் பாகிஸ்தான் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா!

இந்தியாவை கண்காணிக்கும் பாகிஸ்தான் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா!

சீனா மார்ச்- 2 சி ராக்கெட்டை நேற்று முதல் முறையாக விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் சர்வதேச செயற்கைக் கோள்களை சீன ராக்கெட்டுகள் வர்த்தக ரீதியில் சுமந்து சென்று விண்ணில் செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள ஜிவ்குவான் ஏவுகளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மதியம் 11.56 மணிக்கு சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட், பாகிஸ்தானுக்காக பிரஸ்-1 மற்றும் பாக்டெஸ்-1ஏ ஏவுகணைகளை சுமந்து சென்று விண்ணில் செலுத்தியது.

இந்த இரு செயற்கைக் கோள்களில், பிரஸ்-1 என்பது பாகிஸ்தானுக்காக சீனா வடிவமைத்த முதல் ஆப்டிகல்' வகை தொலை உணர்வு செயற்கைக்கோள் ஆகும். பாக்டெஸ்-1ஏ ஏவுகணை, பாகிஸ்தானிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.