21-வது காமன்வெல்த் போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது

21-வது காமன்வெல்த் போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது

கோல்டுகோஸ்ட்: 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 80 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.  59 வெள்ளிப் பதக்கங்கள் 59 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 198 பதக்கங்களை ஆஸ்திரேலிய அணி வென்றது. இங்கிலாந்து அணி 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களை வென்று இரண்டாவது இடம் பிடித்தது.

 இந்த விளையாட்டு திருவிழாவின் 11-வது நாளான நிறைவு நாளான இன்று இந்திய அணி 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்தது.ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கிய   21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது