மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில்தங்கம் வென்றார் கோரி கார்டர்

மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில்தங்கம் வென்றார் கோரி கார்டர்

லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்காவின் கோரி கார்டர், பந்தய தூரத்தை 53.07 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். அவரது சகநாட்டைச் சேர்ந்தவரும் ஒலிம்பிக் சாம்பியனுமான டெய்லஹ் முகம்மது பந்தய தூரத்தை 53.50 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், ஜமைக்காவின் ரிஸ்டன்னா பந்தய தூரத்தை 53.74 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் துருக்கியின் ரமில் குலியேவ் பந்தய தூரத்தை 20.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். தென் ஆப்பிரிக்காவின் வான் நிகெர்க் பந்தய தூரத்தை 20.11 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், டிரினிடாட் மற்றும் டோபாகோவைச் சேர்ந்த ஜெரேம் ரிச்சர்ட்ஸ் பந்தய தூரத்தை 20.11 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் 17.68 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் அவர், தங்கப் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். மற்றொரு அமெரிக்க வீரரான வில் கிளே 17.63 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், போர்ச்சுக்கலைச் சேர்ந்த நெல்சன் இவோரா 17.19 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.