ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி: காலிறுதி சுற்றில் சாய்னா நேவால் தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி: காலிறுதி சுற்றில் சாய்னா நேவால் தோல்வி

ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. கவுரவமிக்க பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான இதில் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை நேர் செட்டில் விரட்டியடித்த இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் நேற்று 2-வது சுற்றில் லின் ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்ட்டை (டென்மார்க்) எதிர்கொண்டார். 

முதல் செட்டை அதிர்ச்சிகரமாக இழந்த சாய்னா அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு சரிவில் இருந்து எழுச்சி பெற்றார். 51 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் சாய்னா 8-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் ஹோஜ்மார்க்கை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தாய் ஜூ இங்கை (சீன தைபே) எதிர்கொண்டார். இறுதியில் 15-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் வீராங்கனை தாய் சூ இங்-கிடம் சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெளியேறினார்.