காமன்வெல்த்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை மேரிகோம்...

  காமன்வெல்த்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை மேரிகோம்...

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். குத்துச்சண்டையில் இன்று இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவர் இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை கிறிஸ்டினா ஒஹாராவை 5-0 என வீழ்த்தினார்.இதன்மூலம் இந்தியா 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.