கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்திய நேபாளம்

கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்திய நேபாளம்

மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் இந்தியா, நேபாளத்தை எதிர்கொண்டது.முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, நேபாளத்தின் அபார பந்து வீச்சால் 48.1 ஓவரில் 166 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நேபாளர் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதற்கு முன் நேபாளம் எந்த வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவை வென்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் நேபாள அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.